கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
மோதரை – மட்டக்குளிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவர் மட்டக்குளிய – ஃபாம் வீதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவராவார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, மோதரை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.