தேர்தல் காலத்தில் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!!
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி இவர் இரத்தினபுரி மற்றும் கேகாலைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரவி வித்யாலங்கார யாழ் மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் தேர்தல் காலத்தில் எந்தவொரு அரசாங்க உத்தியோகத்தரையும் இடமாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியுடனேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத தெரணவிடம் குறிப்பிட்டார்.