By 6 December 2014 0 Comments

ஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள், இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்ப்பார்களா? (கட்டுரை)!!

timthumb (2)துரத்தும் வறுமைக்குள் வாழ்வுக்கான போராட்டம்: யுத்­தத்தால் கண­வனை இழந்த குழந்­தை­க­ளுடன் அல்­லாடும் அபலைத் தாயின் சந்­திப்பு கிடைத்­தது. நாள­டைவில் அவாவை மறு­மணம் செய்து அந்தக் குழந்­தை­க­ளுடன் அன்­பாக என் வாழ்வை நகர்த்தி வரு­கிறேன்.

ஆனால் வறுமை என்னை விட்­டு­வி­டாது துரத்­திக்­கொண்டே இருக்­கின்­றது. எனக்கு உத­விக்­கரம் நீட்­டு­வீர்­க­ளானால் என்­கு­டும்பக் கஷ்டம் என் தலைமுறை­யுடன் நிறைவடைந்து விடும்

பட்­ட­காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழ­மொழியை எம்­மூதா­தை­யர்கள் அன்று ஏன்­ கு­றிப்­பிட்­டார்­களோ என்று தற்­கா­லத்­த­வர்­க­ளுக்கு புரிந்திருக்காது விட்­டாலும் அந்த பழ­மொ­ழிக்கு நூற்­றுக்கு நூறு­வீதம் உதா­ர­ண­மாக அமையக் கூடிய சம்­ப­வங்கள் சமூ­கத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்­கின்­றது.

கொடிய யுத்தம் என்று ஆரம்­பிக்­கப்­பட்­டதோ அன்­றி­லி­ருந்து வடக்கு வாழ் மக்­களின் அன்­றாட வாழ்க்­கையும் எதிர்­கா­லமும் கேள்­விக்கு­றி­க­ளு­ட­னேயே தொடர்ந்­தது.

அவ்­வா­றி­ருக்­கையில் தான் விவ­சா­யத்தில் திளைத்­துக்­கொண்­டி­ருந்த முல்லை மண்ணில் திருப்­தி­யான வாழ்க்­கையை வாழ்ந்­து­கொண்­டி­ருந்த செல்லத்தம்பி சத்­தி­ய­மூர்த்­திக்கு 1996இல் எதிர்­பா­ராத வித­மாக எறி­க­ணைக்கு இலக்­காகி தனது கால்­களைப் பறி­கொ­டுத்தார்.

இருந்­தாலும் தனது தன்­னம்­பிக்­கையை இழக்­கா­தவர் தொடர்ந்தும் முன்­னேற்­றத்­திற்­காக விவ­சா­யத்தில் ஈடு­பட்டார். முயற்­சியைக் கைவி­டாது தொடர்ந்தார். தனது கால்­களை இழந்த போதும் தன்னால் இந்த உலகில் சாதா­ரண வாழ்க்­கையை வாழ முடியும் என்­ப­தையே அதிகம் விரும்­பினார்.

ஆனால் மீண்டும் மற்­று­மொரு அனர்த்தம். 2009 இறுதி யுத்தம். தொலைத்த கால்­க­ளு­டனும் தொலை­தூரம் சென்றார். உயிர் மட்­டுமே எஞ்­சி­யது. முகாமுக்குள் முடங்­கி­யவர் இல்­லறம் தொலைத்த பெண்­ணுக்கு மீண்டும் வாழ்­வ­ளித்தார்.

கைப்­பி­டித்த மனைவி மற்றும் குழந்­தை­களை தன்னால் காப்­பாற்ற முடியும் என அதீத நம்­பிக்கை கொண்­டி­ருந்த போதும் வறு­மையின் கோரம் அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­வில்லை.

தற்­போது 40வய­தாகும் இவ­ருக்கு இன்­னல்கள் தொடர்­கின்­றன. நடப்­ப­தற்கு திறன் இன்­றிய போதும் தன்னால் ஏதா­வது செய்­ய­மு­டியும் எனக் கூறி நன்மை செய்த நல்ல உள்ளம் இன்று வெந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

எல்­லோரும் நாங்கள் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு விட்டோம் எங்­க­ளுக்கு யாரா­வது கை கொடுங்கோ என்று நாலஞ்சு வரு­ஷமா சொல்லிக் கொண்டு வருவதையே கேட்க நாதி­யற்ற சமூ­கத்தில் நாங்கள் வாழ்ந்­திட்டு வாறம்.

இந்த நேரத்தில் 19 வரு­ஷமா இரண்டு கால்­க­ளையும் இழந்து சொந்த வீடு, காணி, வயல் எல்­லா­த்தையும் விட்­டிட்டு இன்­றைக்கு கிரா­மத்தின் ஒரு ஒதுக்கு புறத்தில் இரண்டே இரண்டு குடும்­பங்கள் வசித்து வரும் இடத்தில் என் குடும்பம் வாழ்ந்து வரு­கி­றது.

1996 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 19 ஆம் திகதி என்ர வீட்டில் இருக்கும் போது (யாழ்ப்­பாண இடப்­பெ­யர்வு காலம்) பர­வ­லாக அடிக்­கப்­பட்ட எறி­க­ணை­களால் என் வீட்­டுக்கு மேல் விழுந்து வெடித்த ஷெல்லில் என் இரு­கால்­களும் கண்­முன்னே பறந்­தன.

பறந்­தது மட்டும் தான் தெரியும். கண்ண முழிச்சு பார்த்தா வவு­னியா ஆஸ்­பத்­தி­ரி­யில் இருந்தன். பிறகு இலங்கை செஞ்­சி­லுவை சங்­கத்தின் உத­வி­யுடன் கொழும்பில் ஜெய்ப்பூர் கால் போடப்­பட்டு செயற்கை கால்­க­ளுடன் சாதா­ரண மனிதர் போல என் வாழ்க்­கையை ஆரம்­பித்தேன்.

ஆரம்­பத்தில் விவ­சா­யத்தை மட்டும் முழு­மூச்­சாக செய்­தனான். கால்­களை இழந்த பின் என் மனோ திடத்தின் உத­வி­யுடன் வயல்­களை குத்­த­கைக்கு எடுத்து செய்து வந்தேன். அதில் வரும் வரு­மானம் எனக்கு நிறை­வாக இருந்­த­துடன் என் சுற்­றத்­தையும் பார்த்துக் கொள்­ளு­ம­ள­விற்கு போது­மாக இருந்தது. ஆனால் காலன் விட­வில்லை.

மீண்டும் 2009 இல் என்னை துரத்தத் தொடங்­கி­யது. 2009 இல் நான் மட்­டு­மல்ல வன்னி மண் முழு­வதும் இடம்­பெ­யர்ந்­தது. அதில் வசதி படைத்­த­வர்கள் புலம் பெயர்ந்­தார்கள். நாங்கள் இடம்­பெ­யர்ந்தோம். மீண்டும் முகா­முக்குள் முடக்­கப்­பட்டோம்.

அந்த நேரத்தில் யுத்­தத்தால் கண­வனை இழந்த குழந்­தை­க­ளுடன் அல்­லாடும் அபலைத் தாயின் சந்­திப்பு கிடைத்­தது. நாள­டைவில் அவவை மறு­மணம் செய்து அந்தக் குழந்­தை­க­ளுடன் அன்­பாக என் வாழ்வை நகர்த்தி வரு­கிறேன்.

நான் விதவைத் தாய் ஒருவரை மறு­மணம் செய்து விட்டேன் என்­றதும் என் சுற்றம் உறவு எல்லாம் என்னை கைவிட்டு விட்­டது. ஆனால் பெற்றோர் வெறுக்­க­வில்லை. பெற்றோர் அம்மா யுத்­தத்தால் இறந்து விட்டார் அப்பா எனக்கு பக்க பல­மாக இருந்து அண்­மையில் தான் இறந்­தவர்.

இருந்­தாலும் நான் என் மனோ­தி­டத்தை கைவி­ட­வில்லை. என்னை நம்பி குழந்­தை­க­ளோடு வந்த பெண்ணை கடைசி வரை காப்­பாற்ற வேண்டும் என்ற தீவிர முயற்­சியில் இறங்­கி­யுள்ளேன்.

இதன் ஒரு படி­யாக இந்­திய வீட்டுத் திட்­டத்­திற்கு பதிஞ்சு எவ்­வ­ளவோ கஷ்­டப்­பட்டு பெர்மிட் எடுத்து வள­வில சுத்தி வர இருந்த தென்னை மரங்­கள தறிச்சு வீட்டைக் கட்ட ஆரம்­பிச்சேன்.

அந்த சமயம் சமூக சேவை பிரிவில் இருந்து வீடு கட்ட சிறு கொடுப்­ப­னவு தாரம் என்று சொல்லி 1 இலட்சம் முற்­பணம் தந்­தார்கள். இந்­திய வீட்டுத் திட்டப் பணத்­தோட இதையும் போட்டு வீடு கட்டி முற்­றுப்­பெறும் தறு­வாயில் உள்­ளது. ஆனால் இன்றும் சுத்து பூச்சு பூச வேணும் கதவு யன்னல் ஒன்றும் போடேல்ல.

இப்ப தற்­கா­லிக கூடா­ரத்­தில இருக்­கிறம். ஆனால் மாரி தொடங்­கி­ய­தால கூடார வாழ்வை நினைத்துக் கூட பார்க்க முடி­யாத நிலையில் இருக்­கிறன். இந்­திய வீட்டை முழு­தாக விரைவில் முடி­யுங்கோ என கிழ­மைக்கு கிழமை அதி­கா­ரிகள் வந்து சொல்லிக் கொண்டே இருக்­கி­றார்கள்.

ஆனால் முடிந்த பாட்டைக் காண­வில்லை. சமூக சேவை அமைச்­சால இன்னும் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா தாறன் என்­ற­வர்கள் ஆனால் இன்னும் தரேல்ல.

காணிக்குள் இருந்த அரை­வாசி தென்­ன­ம­ரங்­கள தறித்­துத்தான் கூரை வேலை செய்­தனான். இத­னால மிஞ்சி இருக்­கிற தென்ன மரங்­கள்ள வாற தேங்­கா­யில 18 ரூபா, 20 ரூபா, 25 ரூபா என அள­விற்­கேற்ற விலை­களில் வித்து நாளாந்த செலவை பார்த்துக் கொள்­ளுறன். எனக்கு வீட்டுத் திட்­டத்தை எவ்­வாறு முடிப்­ப­தென்றே தெரி­யேல்ல.

இதை­விட நான் இருக்­கிற இடம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில கரை­து­ரைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட குமா­ர­புரம் கிராமம். எமது கிரா­மத்­தோட அண்டி பால் பண்ணை, முறிப்பு என்ற 2 கிரா­மங்கள் இருக்கு. இந்த மூன்று கிரா­மத்­துக்கும் ஒரு கிராம சேவகர் பிரி­வுதான். இங்க 355 குடும்பம் இருக்­கிறம்.

இன்று நேற்­றல்ல 60 வரு­ஷத்­துக்கு மேல றோட்­டிற்கு கரன்ற் இருக்கு. சப்ளே போடா­த­தால எங்­க­ளுக்கு கரன்ட் இல்லை. போக்­கு­வ­ரத்து வசதி இல்லை. 2 கிலோ மீற்­ற­ருக்கு அப்பால் தான் கடை, பள்­ளிக்­கூடம் இருக்கு.

இந்த வருஷம் மூத்த மகள் க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை எழு­துறா. படிப்­பைத்தான் விளக்­கில படிக்­கலாம். வன்னி மாண­வர்­க­ளுக்கு பழகிப் போன விடயம் ஆனால் போக்­கு­வ­ரத்து இல்­லா­த­தால பாது­பாப்­பற்ற காட்­டுப்­பு­றத்­தில இருந்து குமர்ப் பிள்­ளையை பாட­சா­லைக்கு அனுப்ப முடி­யாத நிலையில் இருக்­கிறன்.

19 வரு­ஷ­மாக எத்­த­னையோ தேர்தல் வந்­தது. ஆட்சி மாற்றம் வந்­தது. ஆனால் எமக்கு எது­வுமே கிடைக்கவில்லை. அதுதான் போச்­சென்று பார்த்தா ஜனா­தி­ப­தி­யால அறி­மு­கப்­ப­டுத்­திய வாழ்வின் எழுச்சி அபி­வி­ருத்தி திட்டம் சமுர்த்தி இல்லை.

இதனால் எந்த ஒரு உத­வியும் எமக்கு கிடைக்­கேல்ல. இன்­றைய அர­சியல் களத்தில் சமுர்த்­திக்கு உள்­வாங்­கப்­பட்­டால்தான் ஏதா­வது கிடைக்கும்.

வாழ்­வா­தாரம் தாறம் தாறம் என்று ஆளுக்­கொரு பக்­க­மாக பெயரை கேட்டுக் கேட்டு எழுதிக் கொண்டு போறாங்­களே தவிர ஒன்­றுமே கிடைக்­கேல்ல.

சமுர்த்தித் திட்டம் 2005 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. எமக்கு மரக் கன்­றுகள் கால்­ந­டைகள் கிடைத்­தி­ருந்தால் இன்­றைக்கு 9 வரு­ஷத்­தில பசு­மாடு 2 தரம் கன்று ஈன்­றி­ருக்கும். வச்ச மரம் காச்­சி­ருக்கும் இரண்டும் இல்லை.

இவற்­றுக்­கப்பால் எத்­த­னையோ அர­சியல் வாதிகள் இருக்­கி­றார்கள். ஏன் வன்னி மண்ணை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்கள் இருக்­கி­றார்கள். இது­வரை எங்­களை எவரும் திரும்பிப் பார்க்­க­வில்லை. (இனி ஒரு­வேளை தேர்­தலை மையப்­ப­டுத்தி வரு­வார்­களோ தெரி­யாது)

இருந்­தாலும் மனி­தா­பி­மானப் பணி­யாக ஞானம் பவுண்­டேசன் எனக்கு ஒரு ஆட்டோ வாங்­கித்­தந்­தவ. பிள்­ளை­களின் படிப்­புக்கு மட்டும் பயன்­ப­டுத்­து­வ­துடன் சிறிது காலம் ஹயர் ஓடி­னனான்.

ஆனால், என்னை கண்­டதும் இரண்டும் பொய்க்கால் என்­றதும் ஒரு­வரும் ஏற வர­மாட்­டார்கள். அதுதான் போகி­றது என்று தேத்­தண்ணி கடேல்ல கூட வேலை கேட்டன் அதுக்கும் நேர வரச்­சொல்­லிப்­போட்டு காலில்­லாத என்னை நம்பி வேலை என்­னண்டு தாற­தென்று தரேல்ல.

இவ்­வா­றான சூழலில் பசு மாடு வாங்கி வளர்ப்பம் என்று கடன்­பட்டு மாடு வாங்கி மேய விட்­டதும் அக்கம் பக்­கத்தில் உள்ள வயல்­மேட்­டில்தான் மாடு மேய்ஞ்சு கொண்டு நின்­றது. ஆனால், வயல்­காரர் மாடு வயலை சேதப்­ப­டுத்­து­வ­தாக கூறி மாட்டை அவிட்­டுக்­கொண்டு போய்­விட்­டார்கள். பயிர்­சே­தத்­திற்கு 500 ரூபா தந்­தாத்தான் மாடு தரு­வ­தாக சொல்­கி­றார்கள்.

இரண்டு காலு­மில்­லாமல் பிள்­ளை­க­ளுடன் தற்­கா­லிக வீட்டில் ஒரு நாளைக்கு 5 தேங்­காயை கடைக்கு குடுத்­திட்டு வாற காசில சோறும் ஒரு கறியும் ஆக்கி சாப்­பி­டுற என்னிடம் 500 ரூபா கேட்டா நான் எங்க போவது. 500ரூபா காசில்­லா­த­தில 30 ஆயிரம் ரூபா பசு­மாட்டை இழக்கும் நிலையில் இருக்­கிறன்.

நாங்கள் படு­கிற கஷ்­டத்தை சொல்­லப்­போனால் முற்­றுப்­புள்ளி இருக்­காது இருந்­தாலும் விடை தேடும் கேள்­வி­களுள் ஒன்­றாக கேட்­கிறேன்.

வீட்­டுத்­திட்டம் பூர்த்­தி­ய­டை­யா­மைக்கு காரணம் குறைந்­தது 40 பாக் சீமெந்து வேணும் அதோட நிலையல் போட்டு கூரை போட்­டாச்சு. ஆனால் கதவு யன்னல் போட வேணும்.

அதேபோல என்னிடம் உள்ள ஆட்டோவை திருத்தி எடுத்து பற்றி போட 15 ஆயிரம் ரூபா காசு வேணும். இவற்றுக்கப்பால் என்னிடம் உள்ள ஒரே ஒரு செல்வமான பால்மாட்டை மீட்டெடுக்க 500ரூபா வேணும் யாராவது என் கஷ்டத்தை உணர்ந்து உங்களில் ஒருவனாக என்னைக் கருதி எனக்கு உதவிக்கரம் நீட்டுவீர்களானால் என்குடும்பக் கஷ்டம் என்தலைமுறையுடன் நிறைவடைந்து விடும் என் குடும்பத்துக்கு தொடராது.

மனி­தா­பி­மானம் கொண்ட இவ்­வா­றான மனி­தர்கள் மதிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள். அவர்­களின் தன்­னம்­பிக்­கைகள் பாது­காக்­கப்­பட வேண்­டி­யவை. இதனை நாம் கருத்தில் கொண்டு எம்­க­ரு­மத்தை முன்­னெ­டுப்­பது சிறந்­தது. இந்த மனித உள்­ளத்தின் வறு­மையை போக்க யாராவது முன்வருவார்களா?

வருடாவருடம் மாவீரர் தினவிழா மிகவும் ஆடம்பரமாகவும், ஜந்து நட்சத்திர விழா போன்று பெரும்தொகை பணத்தை செலவழித்து கொண்டாடுகின்றவர்கள்.. (எவ்வளவு எவ்வளவு காசு செலவழிக்கிறார்களோ .. அவ்வளவுக்கு அவ்வளவு பணத்தை இவ்விழவின் மூலம் மீட்டொடுப்பார்கள் விழா அபை்பினர்) யுத்தத்தில் போராடி விழுப்புண் அடைந்து வாழ்கையை கொண்டு நடத்தமுடியாமல் போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் போரளிகள் மற்றும் போரால் பாதிக்கபட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவார்களா?

ஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள் இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்பார்களா??

சுவிஸில் நடந்த ஆடம்பரமான மாவீரர் விழா பாருங்கள் எவ்வளவு ஆடம்பரமாக இவ்விழாவை கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை..

இம்முறை..

‘தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்“
‘தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்“ குழவால் குலுக்கப்பட்ட….. சுவிஸ் வருவதற்கான அதிஸ்ர லாபச் சீட்டு இம்முறை.. திரு. கொளத்தூர் மணி வீழ்ந்துள்ளது. வருடாவருடம் தமிழகத்திலிருந்து யாராவது ஒருவரை கூப்பிட்டு மாவீரர் தினவிழாவில் கௌரவிக்கிறார்கள்.

இவர்களுக்கும் விடுதலை போராட்டத்திற்கும், மாவீரர்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கின்றதா?

திரு. கொளத்தூர் மணி
திரு. கொளத்தூர் மணி
திரு. கொளத்தூர் மணிPost a Comment

Protected by WP Anti Spam