யாழில் பழைய கைக்குண்டு மீட்பு!!
கொழும்புத்துறை பகுதியில் ஜோனி பட்டா என்று அழைக்கப்படும் பழைய குண்டு மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்புத்துறை பிரதான வீதிப்பகுதியில் இருந்தே இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் பெய்த மழையினால் கைக்குண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணி ஒன்றில் இருந்துள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதனைக் கண்டு யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன் பிரகாரம் யாழ். பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நேற்று சனிக்கிழமை இரவு இதனை மீட்டுள்ளனர்.