ரஜினி பிறந்தநாளில் காக்கிசட்டை ஆடியோ வெளியீடு!!

Read Time:1 Minute, 45 Second

6fb3bd13-172c-4da7-91a1-e30ff21f75ad_S_secvpfசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை கடந்த வாரமே வெளியிடுவதாக இருந்தனர். ஆனால், அனிருத் பாடல் பதிவை முடிக்காதததால் ஆடியோ வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டார் அனிருத்.

இதனால், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அன்றைய தேதியிலேயே ரஜினியின் ‘லிங்கா’ படமும் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தற்போது இப்படத்தின் ஆடியோ புரோமஷனுக்காக ஒரு ஆடியோ டிராக்கை மட்டும் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூனைக்கு யார் மணி கட்டுவது!! இலங்கையின் எதிர்கால அரசியல்??
Next post கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!!