திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா! பச்சை நீலமாகிறது..?
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவருக்கு சமர்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின் திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவியுடன் மற்றுமொரு உயர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.