ஒருவரை கொன்ற குற்றத்திற்கு இருவருக்கு மரண தண்டனை!!
பொல்லால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க இந்த மரண தண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
1997 ஏப்ரல் மாதம் 14ம் திகதி ராஜாங்கனை – அங்கமுவ பகுதியில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.