ரிஷாத் தரப்பு இன்னும் முடிவெடுக்கவில்லையாம்: ஜனாதிபதி செயலக செய்தி பொய்யா?

Read Time:3 Minute, 49 Second

757914975mrஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அக்கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது என்று, ஜனாதிபதி செயலகம் கடந்த வாரம் கூறியிருந்தது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, சில கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றாலும், ஆதரவு எனும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலர் ஒய் எல் எஸ் ஹமீத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தால் வெளியிட்ட தகவல் சரியானது அல்ல என்றும் முஸ்லிம் மக்களின் நலன்கள் குறித்து மேலும் சில விஷயங்கள் குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அக்கூட்டுக் குழு கூடி ஆராய்ந்த பின்னரே முடிவு ஏதும் எடுக்கப்படும் என்றும் ஹமீத் கூறினார்.

இருதரப்புக் குழுக்களும் தனித்தனியாகவும், கூட்டாகவும் விவாதித்த பிறகு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்நிலைக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி கூடும் என்றும் அதன் பின்னரே தமது நிலைப்பாடு வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சூழலில் தமது பேச்சுவார்த்தைகளை மட்டுமே வைத்து, தமது கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது சரியானது அல்ல என்றும் ஹமீத் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் வாழ்வாதார உத்திரவாதம், மதக்கடமைகளை பயமின்றி சுதந்திரமாக முன்னெடுப்பது ஆகியவை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன எனவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதிப்படும் விஷயங்கள் தமது தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு அவர் கூறுவதை உறுதி செய்ய வேண்டிய தேவையும் தமது கட்சிக்கு உள்ளது என்றும் தெரிவித்தார் ஹமீத் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் தொகையில் முஸ்லிம்கள் பத்து சதவீதம் இருந்தாலும், அரச வேலைகளில் நான்கு சதவீதம் கூட அவர்கள் இல்லை என்பதை தமது தரப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை புழலில் மாயமான போலீஸ்காரரின் மனைவி மும்பையில் மீட்பு!!
Next post ஜனாதிபதி மஹிந்த இன்று திருப்பதி விஜயம்: எதிர்ப்பும் பாதுகாப்பும் தீவிரம்!!