திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திஸ்ஸ அத்தநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனக்கான நியமனம் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.