பாராளுமன்றம் இன்று கூடுகிறது: எத்தனை பேர் கட்சி தாவுவர்..?

Read Time:1 Minute, 33 Second

2015ம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (12) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சித் தாவல் குறித்து அதிகம் பேசப்படுவதால் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதும் அவ்வாறான கட்சித் தாவல்களை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும், எதிர்கட்சி பக்கங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சித் தாவல் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இன்று கட்சி தாவுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பாராளுமன்றில் ஆசனங்களிலும் மாற்றம் ஏற்படும்.

இதேவேளை, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரின் வெற்றிடத்தை நிரப்பவென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாயை கொடுத்து ரோசியிடம் வாங்கிக் கட்டும் எஸ்.பி!!
Next post சோலங்காராச்சி, ஹிருணிகா ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்!!