மதுபான விளம்பரத்தில் புத்தரை இழிவுப்படுத்திய நபர்கள்: கொந்தளித்த மக்கள் (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 2 Second

buddha_insulted_002மியான்மர் நாட்டில் புத்தரை இழிவுபடுத்தி விளம்பரம் ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
மியான்மரின் யாங்கோன்(Yangon) நகரில் உள்ள விகாஸ்ட்ரோ பார்(VGastro Bar) என்ற மதுபான விடுதி தங்களது விளம்பரம் ஒன்றில், புத்தர் கண்களை மூடியிருந்தபடி, காதுகளில் ‘ஹெட்ஃபோன்களை’ (Headphone) அணிந்துகொண்டு இசை கேட்பது போல சித்தரித்திருந்தனர்.

மேலும் புத்தரது படத்துக்கு கீழே ஞாயிற்றுக்கிழமை மதியங்களில், அளவில்லாமல் விரும்பியபடி மதுவும் ஹூக்கா குழாய்கள் மூலம் புகைக்கவும் வாருங்கள் என அழைப்பும் அந்த விளம்பரத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் குறிப்பிட்ட மதுபான விடுதியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியானவுடன், பலரும் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் கோஷமிட்டதால் நேற்று அந்த மதுபான விடுதியை மூடி, அதன் பொது மேலாளர் பிலிப் ஃபிளாக்வுட் (Philip Blackwood Age-32) மற்றும் துன் துரேய்ன் (Tun Thurein Age-40), டுட் கோ கோ ல்வின் (Htut Ko Ko Lwin Age-26) ஆகிய மூவரையும் கைது செய்த பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த விளம்பரங்கள் இப்போது அகற்றப்பட்டதுடன், அந்த இடத்தில் மன்னிப்பு கோரி அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து!!
Next post மதம் மாற்ற விவகாரம்: ஆக்ராவில் முக்கிய குற்றவாளி கைது!!