காமெடி நடிகருடன் அஞ்சலி ரகசிய திருமணம்?
நடிகை அஞ்சலி காமெடி நடிகர் சதீஷை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அஞ்சலி அங்காடி தெரு படம் மூலம் பிரபலமானார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிறகு சித்தியுடன் கோபித்துக் கொண்டு ஐதராபாத்தில் குடியேறினார். அங்கு தொழில் அதிபர் ஒருவரை மணந்ததாக கிசுகிசுக்கள் பரவின. அதனை மறுத்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறார். மாப்பிள்ளை சிங்கம், அப்பா டக்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அவருக்கும் சதீசுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக செய்தி பரவி உள்ளது. சமீபத்தில் ரிலீசான கத்தி படத்தில் சதீஷ் நடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
அஞ்சலியுடன் ரகசிய திருமணம் நடந்ததாக வெளியான செய்தி வதந்திதான் என்று சதீஷ் மறுத்தார். அவர் கூறும்போது, அஞ்சலியை நேரில் ஒருமுறை கூட நான் பார்த்ததே இல்லை. சினிமாவில் மட்டும்தான் பார்த்து இருக்கிறேன். அப்படி இருக்க அவரை எப்படி திருமணம் செய்து கொண்டு இருக்க முடியும். இது முழுக்க பொய்யான செய்தி என்றார்.
Average Rating