சங்கக்கார விளாசல் – இங்கிலாந்துக்கு இலக்கு 293..!!

Read Time:1 Minute, 49 Second

294397065Untitled-1இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 293 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை மூன்றிலும் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-2 என இலங்கை முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஆறாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரரரான மஹெல ஜெயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும் நிதானமாக ஆடிய டில்ஷான் 68 ஒட்டங்களுடன் வௌியேற, குமார் சங்கக்கார அதிரடியாக 112 ஓட்டங்களைக் குவித்தார்.

ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை 292 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து 293 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்து போன தோழி கனவில் வந்து அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை!!
Next post ஐவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய விபத்து!!