டெல்லி விமான நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!
துபாயில் இருந்து டெல்லி வந்த 28 வயது பெண் ஒருவர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு, தனது சகோதரர்களுக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த சரவண்குமார் என்ற வாலிபர், அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றார். தொடர்ந்து தகராறு செய்த வாலிபரை அந்தப் பெண் பிடித்துக் கொண்டு அலறினார்.
உடனே அக்கம்பக்கத்தினர், அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை விமான நிலைய போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், வாலிபர் சரவண்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.