இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

Read Time:3 Minute, 48 Second

2638ca61-dfb8-4999-a763-df049b08630a_S_secvpfதிருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் –மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். தமிழ்செல்வி அப்பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 5–ந்தேதி தமிழ்செல்வி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று உடலை பார்வையிட்டனர். அப்போது தமிழ்செல்வியின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆத்தூர் அருகே காந்திபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கன்னிமுத்து (29) என்பவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது ,தமிழ்செல்வியை கொலை செய்திருப்பதும், போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் கன்னிமுத்து குணமாகியதையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

எனக்கும் தமிழ்செல்விக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தது. எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் நான் தமிழ்செல்வியுடன் நெருங்கி பழகி வந்தேன். அவ்வப்போது வெளியூர் சென்று உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

இந்நிலையில் தமிழ்செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் வற்புறுத்தினார். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதால் நான் மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 5–ந்தேதி தமிழ்செல்வி வீட்டிற்கு சென்றேன். அவரது தாய் வெளியே சென்றிருந்த சமயம் உள்ளே சென்று தமிழ்செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். போலீசார் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர்பிழைத்தேன். மேலும் என்னை கைதும் செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயக்குனர் பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி: ரஜினி நேரில் சந்திப்பு!!
Next post அரக்கோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!