பெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி!!

Read Time:2 Minute, 6 Second

3daf35c9-7221-4de2-82fa-59c059072d94_S_secvpfஇந்தியாவில் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகள், சில சமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு முடிவு கட்ட ரெயில்வே அமைச்சகம் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முக்கியமான நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களின் பெண்கள் பெட்டியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும் என்று மக்களவையில் ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று எம்.பி. ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய இணை மந்திரி மனோஜ் சிங்கா பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பெண்கள் பெட்டிகளில் காண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கை திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

நீண்டகால நடவடிக்கை திட்டத்தின்படி 50 மின்சார ரெயில்களிலும், மெயின் ரெயில் லைனில் 50 பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளில் நவீன தொழில்நுட்டபத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய முக்கியமான பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீராநந்தனுக்காக 32 மணி நேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்!!
Next post தொடர்ந்து நான்காவது வாரம் குப்பைகளை சுத்தம் செய்யும் பப்பரப்பாம் படக்குழு!!