அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!!
அவுரங்காபாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை கற்பழித்து உள்ளார். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்து உள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் கொதித்து போனார்கள். உடனடியாக மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, உஸ்மான்பூர் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் உஸ்மான்பூர் போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சுரேஷ் வாகுலேயை கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.