திருவல்லிக்கேணியில் பெண் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது!!

Read Time:2 Minute, 20 Second

a7ea8856-6abe-416c-922d-d0cfe41600a3_S_secvpfஅயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி, பார்த்த சாரதி கோவில் சந்தில் உள்ளது.

புவனேஸ்வரிக்கு திருமணமானதும் கணவருடன் போலீஸ் குடியிருப்பில் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். பார்த்த சாரதி கோவில் சந்தில் உள்ள வீட்டில் அவரது தாயார் ராஜேஸ்வரி தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று ராஜேஸ்வரி எதிர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 110 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொள்ளையில் அருண்குமார், ராஜா ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 50 பவுன் நகை மீட்கப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பொன்னேரி சங்கர் நகரை சேர்ந்தவர் பாண்டியன். முன்னாள் ராணுவ வீரர். அதே பகுதியில உள்ள வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.9 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 கிராம் தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

வீட்டில் இருந்த நகைகளை அவர் நேற்று வங்கி லாக்கரில் வைத்ததால் அவை தப்பியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!!
Next post பானை போன்ற தொப்பையால் கவலையா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!!