கொலை செய்யாதவரை தூக்கில் போட்ட சீனா: 18 ஆண்டுகளுக்கு பிறகு உண்மை அம்பலம்!!

Read Time:1 Minute, 23 Second

412e08eb-71db-41fc-9224-c4b252c4c480_S_secvpfசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் 1996-ம் ஆண்டு ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதாக ஹூக்ஜுலிட்டு (வயது 18) என்பவரை கைது செய்தனர். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்.

இதற்கிடையே அந்த பெண்ணை கொன்றவர் வேறு ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் அந்த பெண்ணை கொன்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீன கோர்ட்டு விசாரித்தது. அதில் ஹூக்ஜுலிட்டு அந்த பெண்ணை கொலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மை வெளியே வந்துள்ளது. இதனால் ஹூக்ஜுலிட்டு குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். ஹூக்ஜுலிட்டு குற்றவாளி அல்ல என இப்போது கோர்ட்டு கூறி இருக்கும் உத்தரவை குடும்பத்தினர் கிழித்து எறிந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாஜ் மகால் நுழைவுக் கட்டணம் உயர்வு: வெளிநாட்டினர் இனி ரூ.1000 செலுத்த வேண்டும்!!
Next post ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி!!