அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக பதவியேற்கும் முதல் இந்திய மருத்துவர்!!

Read Time:2 Minute, 32 Second

9d14b76e-1846-4405-998b-f19d1165d226_S_secvpf37 வயதாகும் அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தி, அமெரிக்காவின் உயர்ந்த மருத்துவப் பதவியான அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக அந்நாட்டு மேலவை தேர்வு செய்தது.

விவேக் மூர்த்தியை நாட்டின் பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக தேர்ந்தெடுக்கும் முடிவை எடுத்ததற்காக மேலவையைப் பாராட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமா, அவர் செய்ய வேண்டிய பணி குறித்து பேசும் போது “ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கான தகவல்கள் கிடைப்பதில் உடனடியாக வேலை செய்து வெற்றியடைய வேண்டும். தனக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள உயிர்களையும், நம் சொந்த வீடான அமெரிக்காவில் உள்ள மக்களை காப்பாற்றுவதையும் விவேக் மூர்த்தி உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி அரசாங்க நிதி மசோதா, எபோலாவை எதிர்த்துப் போராடுவதற்கான நிதி உதவியை அடுத்த ஆண்டு அளிக்கும்.

இதன் மூலம் மருத்துவர் விவேக் மூர்த்தி, இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய-அமெரிக்கர், மிகக் குறைந்த வயதில் நாட்டின் முதன்மை மருத்துவராகப் பணியாற்றுபவர் போன்ற பெருமைகளை பெற்றார்.

இந்திய-அமெரிக்க சமூகம் மற்றும் மேலவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த முடிவை மனதார வரவேற்றுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பதவிக்கான தேர்வுப் பட்டியலில் இருந்து வந்த மருத்துவர் விவேக் மூர்த்தி, மேலவையின் 51 இல் 43 பேரின் வாக்கைப் பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 ஆண்டுகளில் 28 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கல்: உலகளவில் இந்தியா 4வது இடம்!!
Next post 6-ம் வகுப்பு மாணவி கொலை: கடைகள் அடைப்பு- பள்ளிக்கு விடுமுறை!!