டீசரை ராஜதந்திரமாய் வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்!!

Read Time:3 Minute, 37 Second

75dc58bc-fe19-4e29-b85e-e0f4d3137651_S_secvpfசன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் எஸ்.சேகர் நடிப்பில் ஏ.ஜி.அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ராஜதந்திரம்’. படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல படகுழுவினரும் ராஜதந்திரமாய் செயல்பட்டு வருகிறார்கள்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் சுபாவம் வெளிப்படும் வகையில் படக்குழுவினர் 6 டீசர்களை எடுத்து, திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர். படத்தின் முழு டீசரை இளைய தளபதி விஜய் மூலமாக, அவரது டுவிட்டரில் வெளியிடுகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு டீசரை டுவிட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிட்டவர்கள் மற்றும் வெளியிடவிருப்பவர்கள் விவரம் பின்வருமாறு:

படத்தின் கதைக் கருவை உணர்த்தும் டீசரை, டிசம்பர் 14 அன்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

படத்தின் கதாநாயகியான ரெஜினா கெசன்ராவின் சுபாவத்தை வெளிப்படுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று சமந்தா தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

அஜய் பிரசாத் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிப்படுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று குஷ்பு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

டர்புக்கா சிவா நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிப்படுத்தும் டீசரை, இன்று (டிசம்பர் 16) பிரேம்ஜி அமரன் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

இளவரசு நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிப்படுத்தும் டீசரும் இன்று வெளியிடப்பட்டது. இதனை நடிகர் மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

தன் தந்தை பட்டியல் எஸ். சேகர் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, கிருஷ்ணா தனது டுவிட்டர் மூலமாக நாளை (டிசம்பர் 17) வெளியிடவுள்ளார். இதேபோல் கதாநாயகன் வீரா தோன்றும் டீசரை, சிம்பு தனது டுவிட்டர் மூலமாக நாளை வெளியிடவுள்ளார்.

இப்படத்தின் முழு முன்னோட்டத்தை (டிரைலர்) வரும் 18ம் தேதி விஜய் தனது டுவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.

முன்னோட்டத்தை வெளியிடும் படக்குழுவினரின் வித்தியாசமான மற்றும் விமரிசையான அணுகுமுறை பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ஜனவரியில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!!
Next post சூதாட்டத்தால் விபரீதம்: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!!