அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்!!
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்ட நபர், கொழும்பு – கோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டு நாணயங்களுடன் இருந்த இவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கொள்ளையில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் வாக்குமூலம் அளித்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் வசமிருந்து பத்து இலட்சத்துக்கும் அதிகமான பணம் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு – 07 பகுதியைச் சேர்ந்த இவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் இருந்த 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்நாட்டு, வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளையிடப்பட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் 21ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.