தபால் ஊழியர்களுக்கு ஜனவரி 8 வரை விடுமுறை கிடையாது!!
தபால் திணைக்களத்தில் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள ஜனவரி 8ம் திகதிவரை இந்த விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை விநியோகம், வாக்குச்சீ்ட்டு விநியோகம் உள்ளிட்ட முக்கிய பணிகளில் தபால் திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.