ஆர்யாவுடன் நித்தியா!!

Read Time:1 Minute, 52 Second

Untitled-1110துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் இயக்குனர் கதை எழுதி இயக்கியிருந்தார். அன்வர் ரஷீத் தயாரித்திருந்தார்.

இந்த வருடம் வெளியாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்றைய இளைய சமூகத்திற்கேற்றாற்போல், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை திரையில் புதிய அனுபவத்தை பெங்களூர் டேஸ் கொடுத்திருக்கிறது.

தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. பி.வி.பி. சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் தயாரிக்கவுள்ளார்கள்.

தமிழில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கிய பாஸ்கர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார். இதில் சித்தார்த், சமந்தா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர்களுடன் ஆர்யாவும் இவருக்கு ஜோடியாக நித்யா மேனனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2015-ல் தொடங்க இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் காரோட்டிய ஜெய்க்கு அபராதம்!!
Next post இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது!!