நடன கிளப்பில் இளம்பெண்ணுடன் ஆட்டம் போட்ட அம்பரீஷுக்கு எதிர்ப்பு!!
நடன கிளப்பில் இளம் பெண்ணுடன் ஆட்டம் போட்ட நடிகர் அம்பரீஷுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்பரீஷ் கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். 1972–ல் சினிமாவில் அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
தற்போது கர்நாடகத்தில் வீட்டு வசதி துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் அம்பரீஷ் பெங்களூரில் நடன கிளப்புக்கு சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடன கிளப்பில் இளைஞர்கள், இளம்பெண்கள் இருந்தனர். பலர் போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த கிளப்புக்கு அம்பரீஷ் ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து திடீரென சென்றார். அங்கு ஒரு இளம்பெண்ணை கட்டிப்பிடித்தப்படி நடனம் ஆடினார். அந்த பெண்ணுக்கு எல்லோரது முன்னிலையிலும் முத்தமும் கொடுத்தார். இதனை கிளப்பில் இருந்தவர்கள் ஆச்சரியமாய் பார்த்தார்கள்.
இளம் பெண்ணுடன் அவர் ஆடிய படங்கள் இண்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அம்பரீஷுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது கர்நாடக அரசு சிங்கப்பூருக்கு அனுப்பி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. மருத்துவ சிகிச்சைக்கான ரூ.1.22 கோடி செலவையும் அரசே ஏற்றது. நடன கிளப்பில் அவர் ஆட்டம் போட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதுகுறித்து அம்பரீஷ் கூறும்போது, ‘‘நான் ஒரு நடிகன். சினிமாவில் நிறைய பெண்களோடு நடனம் ஆடி இருக்கிறேன். சட்டசபைக்குள் ஆடவில்லையே. நிறைய பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. பெண்களுடன் நடனம் ஆடுவது இல்லை. எந்த பெண்ணும் புகார் அளிக்காத நிலையில் என்மேல் குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது’’ என்றார்.