By 23 December 2014 0 Comments

பாதுகாப்பு கேட்டு மதுரை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!

a5ef8ee2-2d75-4018-bb7b-965e17f8a482_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குருவாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் கோவிந்த் (வயது21). இவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவரது பெரியம்மா வீடு ராமநாதபுரம் அருகே உள்ள எக்காவூரில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்றபோது கோவிந்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கஜிதா பானு (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி கடந்த 19–ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.

பின்னர் அவர்கள் மதுரை மாவட்டம் சுக்கிலாபுரம் அருகே உள்ள நரசிங்க புரத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவிந்த், கஜிதா பானு ஆகியோர் இன்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதாரியிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



Post a Comment

Protected by WP Anti Spam