மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மாட்போன் வழங்குகிறது அரசு!!
மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பா.ஜனதா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி உமா சங்கர் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், “அரசு கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 122 அரசு கல்லூரிகளில் வைபை வசதியையும் அரசு வழங்குகிறது” என்றார்.
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1646 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 302 மூன்றாம் நிலை ஊழியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.