காதலரை மறக்க முடியாத நடிகை!!
மூணுஷா நடிகைக்கும் பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று சமீபத்தில் வெளியான செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு இதுபற்றி எதுவுமே பேசாத மூணுஷா, அதன்பிறகு இந்த செய்தியை மறுத்தும், மறுக்காமலும் பூசி மெழுகி ஒரு பதிலை சொன்னார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அந்த தொழிலதிபருடன் சேர்ந்து காதல் சின்னத்தை தனி விமானத்தில் சுற்றி வந்தார். இதற்கும் அவர் எந்த காரணத்தையும் கூறவில்லை.
இப்போது, அதே தொழிலதிபர் தன்னுடைய தொழில் விளம்பரத்துக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததை மூணுஷா ரீடுவிட் செய்து தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இவர்களுக்கு நெருக்கம் இல்லையென்றால், இதெல்லாம் சாத்தியமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.