அவர்களுடன் நடிக்க அருவருப்பாக உள்ளது! காத்ரீனா!!
ஒரு படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை உடன் நடிக்கும் நடிகைகள் புகழ்ந்து பேசுவதுதான் வழக்கமாக திரையுலகில் இருந்து வருகிறது. ஆனால் பாலிவுட் நடிகை காத்ரீனா மற்ற நடிகைகளில் இருந்து வித்தியாசப்பட்டு உள்ளார்.
மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காத்ரீனா கைப்பிடம் “உங்களுக்கு பொருத்தமான கதாநாயகன் யார்? யாரோடு நடிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த காத்ரீனா, பாலிவுட் கதாநாயகர்கள் ஒருவரும் எனக்கு பொருத்தமானவர்கள் கிடையாது. மேலும் அவர்களுடன் நடிக்கும் ஒவ்வொரு நாளும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன்.
கதாநாயகர்கள் இரவு முழுவதும் குடித்துவிட்டு பகலில் குளிக்காமல் வாசனை திரவியங்களை மட்டும் அடித்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகின்றனர். அவர்களுடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும்போது நாற்றம் அடிக்கிறது. சில சமயம் வாந்தி கூட வருகிறது. அவர்களோடு நடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்பது கடவுளுக்குதான் தெரியும்.
பாலிவுட் நடிகர்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய நடிகர்கள் மிகவும் நல்லவர்கள். படப்பிடிப்புக்கு குளித்துவிட்டு சுத்தமாக வருகிறார்கள். சக நடிகர் நடிகைகளுடனும் கனிவோடு பழகுகிறார்கள். அவர்களிடம் இருந்து பாலிவுட் ஹீரோக்கள் நிறைய கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு கத்ரீனா கைப் ஆவேசமாக கூறினார்.
Average Rating