கல்நெவ பிரதேச சபை தலைவர் விளக்கமறியலில்!!
கல்நெவ பிரதேச சபையின் தலைவர் டப்ளியூ.எம்.சந்திரதிலக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாவத்தகம பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த 16ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மற்றும் கல்நெவ பிரதேசசபைத் தலைவர் சந்திரதிலக உள்ளிட்ட குழுவினர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.