ஓடும் பஸ்சில் பாலியல் தொந்தரவு: வாலிபர்களுக்கு தர்ம அடி போட்டு போலீசாரிடம் ஒப்படைத்த பெண்கள்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா நகரை சேர்ந்த இரு பெண்கள் அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதே பஸ்சில் ஏறிய ரோட்டோர ரோமியோக்கள் இருவர் அந்தப் பெண்களிடம் விரும்பத்தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சித்தனர்.
அவர்களின் இம்சையை தாங்க முடியாமல் விலகி, விலகிச் சென்ற அந்தப் பெண்களை இரு வாலிபர்களும் விடாமல் விரட்டி, விரட்டி தொல்லை தர ஆரம்பித்தனர். இனியும் பொறுமையாக இருந்தால் சரி வராது என்று தீர்மானித்த அவர்கள், அந்த இரு வாலிபர்களையும் பிடித்து, ’நைய்யப்புடைத்து’ போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட கல்பிட் குமார்(25), சாம்ராட்(22) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.