மைத்திரிக்காக பிரச்சாரம் செய்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!!
கொலின்ஜாடிய பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் ஷேரோன் பிரணாந்து உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை இனம்தெரியாத சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வென்னப்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும் இந்தத் தாக்குதல் கொலின்ஜாடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.