பிரிந்து வாழும் மனைவிக்கு நள்ளிரவில் போன் செய்து போலீஸ்காரர் தொல்லை: கமிஷனர் ஜார்ஜிடம் புகார்!!

Read Time:3 Minute, 54 Second

b628d715-36be-4033-8709-d3f05fc0002c_S_secvpfகுரோம்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–

எனது மகள் செந்தில் குமாரிக்கும் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் பாலமுருகனுக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன்பே அவருக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது. மேலும் அவர் போலீசாக இருந்து கொண்டே திருட்டு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். இதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த குற்ற வழக்கை மறைத்து எனது மகளை திருமணம் செய்தார். இது அவளுக்கு தெரியவந்ததும் எனது மகளை மிரட்டத்தொடங்கினார். கள்ளக்காதலியுடன் மேலும் நெருக்கமானார்.

மேலும் எனது மகளுடன் வாழாமல் 2012–ல் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். போலீஸ்காரர் பாலமுருகன் மீது எனது மகள் 2012–ல் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தாள். 2 வருடம் ஆகியும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தோம். கமிஷனர் உத்தரவிட்ட பிறகும் மகளிர் இன்ஸ்பெக்டரும், உதவி ஆணையரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நானும் எனது மகளும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று 50 முறைக்கு மேல் மகளிர் இன்ஸ்பெக்டரிடமும், 5 முறைக்கு மேல் உதவி கமிஷனரிடமும், 3 முறை முன்னாள் தி.நகர் துணை கமிஷனரிடமும் முறையிட்டோம்.

ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போலீஸ்காரர் பாலமுருகன் நள்ளிரவில் எனது மகளுக்கு போன் செய்து குரலை மாற்றிப்பேசி தொந்தரவு தருகிறார்.

ஆபாசமாகவும், அருவறுக்கத்தக்க வகையிலும் பேசுகிறார். அவரது பேச்சை டேப் செய்து வைத்துள்ளோம். அதில் ஏட்டு என ஒருவரை கூப்பிடும் சத்தம் கேட்கிறது. இதன் மூலம் போலீஸ் நிலையத்தில் இருந்தே பாலமுருகன் எனது மகளுக்கு டெலிபோன் செய்து தொந்தரவு கொடுத்தது தெளிவாகிறது.

இந்த முறை கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகார் பற்றி வேலுச்சாமி கூறுகையில், ‘‘பாலமுருகனை திருமணம் செய்த நாள் முதல் எனது மகளும், என் குடும்பமும் மன உளைச்சலில் தவிக்கிறது. எங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. என் மகளுக்கு கொடுமை இழைத்த போலீஸ்காரரால் எப்படி நேர்மையாக கடமையாற்ற முடியும். இதுபற்றி பெண்கள் அமைப்பிடமும், மனித உரிமை கமிஷனிலும் முறையிட உள்ளோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி!!
Next post மைத்திரிக்காக பிரச்சாரம் செய்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!!