எபோலாவுக்கு தீர்வு காணும் சீனா (வீடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 37 Second

ebola_vaccine_002உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரசான எபோலாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, கினியா, சியாரா, லியோன் ஆகியவற்றில் 7000க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய எபோலா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொடிய எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. மேலும் அந்த மருந்தினை இம்மாத இறுதியில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் கூறுகையில், இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியால் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கமும் ராணுவ அதிகாரிகளும் சமீபத்தில் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளதால் இந்த மாதத்தில் இதற்கான மருத்துவ சோதனைகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது!!
Next post என் மகனை விருந்தாளியை போல் நடத்துங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யிடம் கெஞ்சும் தந்தை (வீடியோ இணைப்பு)!!