466 பேருடன் சென்ற பயணிகள் படகு விபத்து!!
466 பேருடன் சென்ற இத்தாலிய பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த படகே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதுவரை 150 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.