பாடசாலைகளில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!!

Read Time:2 Minute, 33 Second

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள இராணுவ பொது பாடசாலைக்குள் கடந்த 16-ம் திகதி புகுந்த தீவிரவாதிகள் அந்த பாடசாலையில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 132 மாணவர்கள் உள்பட 145 பேர் பலியாகினர்.

இதிலிருந்து பாடசாலைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாண அரசு அங்குள்ள தனியார் பாடசாலைகளில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இங்குள்ள பாடசாலைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் வேலையில் கைபர் பக்துங்க்வா மாகாணம் இறங்கியுள்ளது.

இன்னும் சில நாட்களில் இந்த வேலை முடியும் தருவாயில் உள்ளது. மேலும், பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆலோசனையும் நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த மாகாணத்தில் உள்ள பல்வேறு தனியார் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைப்பதற்கு அனுமதி கேட்டு கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முந்தைய தாக்குதல் போன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கும் முன் பொலிஸ் மற்றும் உள்துறை அதிகாரிகள் இடம்பெறும் குழு ஒன்று அந்த பாடசாலையை சென்று பார்வையிடும். அதன்பிறகு அதற்கான அனுமதியை வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு காவலர்களை பணியமர்த்துதல் பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் மாகாண தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடி, ரேகாவே சிறந்த சைவர்கள்!!
Next post ரஜினி என்னைத் தூக்கினார்… நான் அவரைத் தூக்கினேன்!