பின்வாங்கிய அஜித்..!!

Read Time:1 Minute, 52 Second

ajithஅஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று வெளியிடப்பட்டது. அத்துடன், இப்படத்தின் டிரைலரும் இன்று வெளியானது.

டிரைலரும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து மற்றொரு தகவலும் ரசிகர்களுக்காக வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், ‘என்னை அறிந்தால்’ பொங்கல் வெளியீடாக வரும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதில்லையாம். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் படத்தை ஜனவரி 29-ந் தேதி வெளியிடப் போவதாக கோலிவுட்டில் பரவலாக செய்திகள் வெளிவருகின்றன.

ஆகையால், தற்போது பொங்கல் வெளியீடாக விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய படங்கள் மட்டும் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே பொங்கல் வெளியீட்டில் இருந்து சிவகார்த்திகேயனின் ‘காக்கிச்சட்டை’ படமும், கார்த்தியின் ‘கொம்பன்’ படமும் விலகியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்புவனம் அருகே கணவர் திட்டியதால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை!!
Next post கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய பேராசிரியர்–கல்லூரி மாணவி கைது!!