வேலூரில் ரூ.1050 கோடி மது விற்பனை: 2013–ஐ விட ரூ.250 கோடி அதிகம்!

Read Time:2 Minute, 9 Second

ba3ca9b0-170d-448d-a76d-45de8ff37776_S_secvpfவேலூர் மாவட்டத்தில் மொத்தம் 283 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.2 கோடி வரை மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்மூலம் சராசரியாக ரூ.700 முதல் ரூ.725 கோடி வரை ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை விசேஷ நாட்களில் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2013–ம் ஆண்டு கடைசிநாளான டிசம்பர் 31–ந் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மூலம் 7 ஆயிரத்து 925 பெட்டிகள் மதுபான வகைகளும், 3 ஆயிரத்து 900 பீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்பட்டன.

இதன் மதிப்பு ரூ.3 கோடியே 80 லட்சம் ஆகும். 2013–ம் ஆண்டில் மொத்த மதுபான விற்பனை சுமார் ரூ.800 கோடி ஆகும்.

கடந்த 2014–ம் ஆண்டில் ஜனவரி 1–ந் தேதி முதல் நேற்று முன்தினமான டிசம்பர் 31–ந் தேதி வரை மொத்தம் 22 லட்சம் மதுபான பெட்டிகள், பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபான விற்பனை ரூ.1,050 கோடி ஆகும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 ஆயிரத்து 300 பெட்டி மதுபான வகைகளும், 3 ஆயிரத்து 400 பீர் வகைகளும் விற்பனை ஆகி உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும்.

மேற்கண்ட தகவலை டாஸ்மாக் மேலாளர் சேதுராமன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஓரினச்சேர்க்கையை ரசித்த 2 போலீசார் சிக்குகிறார்கள்!!
Next post சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை!!