சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை!!

Read Time:1 Minute, 41 Second

376d46a7-6b1a-4a72-92eb-bcd7bd650d0a_S_secvpfபுத்தாண்டை புதுமையாகவும், சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக விழிப்புணர்வினை ஊட்டும் விதமாகவும் கொண்டாட நினைத்த பஞ்சாப் போக்குவரத்து போலீசார், தண்டித்து, அபராதம் விதிக்கப்பட வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு நேற்று சிகப்பு நிற ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக வழங்கி அசத்தலான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீட் பெல்ட்களை அணியாமல் கார்களை ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் ஆகியோரை நேற்று மடக்கிப்பிடித்த கபுதாலா நகர போலீசார், சுமார் 1,500 வாகன ஓட்டிகளுக்கு சிகப்பு ரோஜாக்களை அன்பளிப்பாக வழங்கி, இனியும் இதே தவறினை செய்ய வேண்டாம் என அன்பாக எச்சரித்து அனுப்பினர்.

இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அவர்களின் முகபாவங்களின் மூலமாகவே அறிந்து கொள்ள முடிந்ததாகவும், இதே பாணியில் இனி பள்ளி மாணவ-மாணவிகளையும் இது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் கபுதாலா நகர போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்ட் தன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூரில் ரூ.1050 கோடி மது விற்பனை: 2013–ஐ விட ரூ.250 கோடி அதிகம்!
Next post கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல்!!