கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல்!!

Read Time:2 Minute, 12 Second

46fa1191-e86b-4670-abd5-71792988c4cd_S_secvpfஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுக்கட்டுப்பாடு, பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருந்தது இவற்றையெல்லாம் விட கெட்ட நேரத்தின் காரணமாகவே நிறைய பேருக்கு புற்றுநோய் வருவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மெல் புற்றுநோய் மையத்தின் விஞ்ஞானிகள் இணைந்து புற்றுநோய் உருவாகும் விகிதத்தை அளவிடும் ஒரு புள்ளிவிவர மாதிரியை உருவாக்கினர். இதில் ஸ்டெம் செல்கள் பிரியும் போது ஏற்படும் சீரற்ற பிறழ்வுகள் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதைக் கண்டறிந்தனர். இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதுதான் மோசமான விஷயம்.

மரபணுவில் உண்டாகும் இந்த சீரற்ற பிறழ்வுகள், புற்றுநோயை வளரச் செய்வதும் ஆய்வில் தெரிய வந்தது. புற்றுநோய் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு புற்றுநோய் உண்டானதற்கான காரணம் அவர்களின் கெட்ட நேரம் மட்டுமே என்பதும், மற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய மரபணு போன்ற காரணங்களால் புற்றுநோய் உண்டானதும் தெரிய வந்துள்ளது.

அதுதான் யாருக்கு வேண்டுமானாலும் வரலாமே, பிறகென்ன இருக்கும் வரை புகைக்கலாம், குடிக்கலாம் என்று நினைப்பவர்கள் உண்டு. இவர்களுக்காகவே, புகையும் மதுவும் சீரற்ற டி.என்.ஏ பிறழ்வுக்குக் காரணமாகி சீக்கிரமே ‘கெட்ட நேரம்’ வந்து விடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை!!
Next post போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்!!