“முழங்கை” கருமையை போக்க…!!

Read Time:2 Minute, 28 Second

Black-color-will-disappear-elbow-Curryபெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வார்கள்.

ஆனால் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை.

சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை கருப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை.

இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள்:

* ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விடவேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால் கருமை நீங்கி விடும்.

* 100 கிராம் துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

* தினமும் கடுகு எண்ணெய் வைத்து 15 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்த பிறகு கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது படிப்படியாக போய்விடும்.

* தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் பஞ்சினால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கான நீங்கி விடும்.

மேற்கூறிய அனைத்தையும் முழங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!
Next post குலசேகரன்பட்டினம் அருகே புதுப்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு!!