அரை இறுதி போட்டியில் ஜெர்மனி-இத்தாலி 4-ந் தேதி பலப்பரீட்சை

Read Time:1 Minute, 36 Second

Foot.gifஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 3 மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. கடைசி லீக் ஆட் டத்தில் பிரேசில் – பிரான்சு அணியை எதிர் கொள்கிறது. பிரான்சு அணி நாக்-அவுட் சுற்றில் புத்துணர்ச்சி பெற் றுள்ளதால் இந்த அணி பிரேசிலுக்கு நெருக்கடி கொடுக்கும் எனத் தெரிகிறது.

நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினாவே வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில இத்தாலி 3-0 என்ற கணக்கில் உக்ரைனை தோற்கடித்தது. வருகிற 4-ந் தேதி நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவுக்கு பின்லேடன் மீண்டும் எச்சரிக்கை
Next post உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி: 1 கோல் போட்டு பிரான்ஸ் வீழ்த்தியது