தற்கொலை செய்து கொள்ளும் டி.வி. சீரியல் காட்சியை ஒத்திகை பார்த்த 9 வயது சிறுவன் பரிதாப பலி!!

Read Time:1 Minute, 54 Second

1f9fd703-c6b7-4ce0-a49c-0af94bd6aaa4_S_secvpfஇந்தக் காட்சிகளை வீட்டில் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்ற அடைமொழியோடு சில சாகச நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும், தடுக்கப்படும் விவகாரங்களில் அத்துமீறியே தீர வேண்டும் என்ற வெறி சிறு வயதில் தோன்றுவதுண்டு.

இதைப் போன்ற ஆர்வக் கோளாறினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் குவாலியர் நகர்வாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள பிண்ட்டோ பார்க் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன், முந்தைய தினம் டி.வி. சீரியலில் பார்த்த தற்கொலை காட்சியை தத்ரூபமாக நடித்துப் பார்க்க ஆசைப்பட்டான். நேற்று வீட்டின் உள்ளறையில் மின்சார விசிறி மாட்டும் கொக்கியில் ஒரு துணியை கட்டி, மறுமுனையை கழுத்தில் மாட்டியபடி கட்டிலில் இருந்து கீழே குதித்தான்.

அறையினுள் இருந்து சத்தம் வந்ததை கேட்டு விரைந்துவந்த அவனது தந்தை, மகன் தூக்கில் தொங்கும் கோலத்தை பார்த்து துடிதுடித்தார். அவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றபோது வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சிக்கு காரணம் சொல்லும் சமந்தா!!
Next post மதம் பிடித்த யானை மிதித்து 14 வயது டெல்லி சிறுமி பலி!!