டி.கல்லுப்பட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!!

Read Time:2 Minute, 9 Second

8a92820f-9901-4e11-a6fb-e9aec101dc25_S_secvpfமதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, வில்லூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகை செல்வன், ரியல் எஸ்டேட் அதிபர்.

கடந்த ஆண்டு இவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டெம்போ வேன்கள் திருடு போனது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடுபோன டெம்போக்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட்டு டெம்போக்களை உரியவரிடம் வழங்குமாறு உத்தரவிட்டது.

போலீசாரிடம் இருந்த தனது டெம்போக்களை கார்த்திகை செல்வம் கேட்டுள்ளார். அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதமுத்து டெம்போ வேன் வேண்டுமானால் ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் தான் தருவேன் என்று கூறியதாக தெரிகிறது.

அப்போது கார்த்திகை செல்வன் தன்னிடம் இருந்த ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். இதை தொடர்ந்து மீதமுள்ள ரூ. 3ஆயிரம் கொடுத்துவிட்டு வேனை எடுத்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கார்த்திகை செல்வன் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி பாண்டியன் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 3 ஆயிரம் பணத்தை இன்று மதியம் இன்ஸ்பெக்டர் பாத முத்துவை சந்தித்து கார்த்திகை செல்வன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாத முத்துவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!
Next post எண்ணூரில் வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 4 பேர் கைது!!