லிங்கா பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு கோரிக்கை!!

Read Time:2 Minute, 20 Second

Untitled-21ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டித் தரவில்லை என்றும், ஆகையால், இந்த படத்துக்கு நஷ்ட ஈடு கோரி, விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது,

‘லிங்கா’ படத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனுடைய இழப்பு 5 சதவீதம் தான் என்றால் தாங்கிக் கொள்வோம். ஆனால், ‘லிங்கா’ படம் மூலம் 40 சதவீத அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

இதுகுறித்து, நடிகர் ரஜினிகாந்துக்கும், படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். நடிகர் ரஜினியும் இது குறித்து மௌனம் சாதித்து வருகிறார்.

அவருடைய பெயரை வைத்துத்தான் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் வியாபாரம் செய்தனர். இதனால் இலாபமடைந்தவர்கள் யார்? என்பது தெரியவேண்டும்.

ஆகையால், ‘லிங்கா’ படத்துக்கு நஷ்ட ஈடு கோரி வருகிற ஜன.10-ம் திகதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். இந்த உண்ணாவிரதம் ரஜினிக்கு எதிரானது அல்ல. லிங்காவால் ஏற்பட்ட இழப்பு மிக அதிகம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துதற்காகவே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட போகிறோம்.

இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதியில் தங்கி படிக்க விரும்பாததால் ஓட்டம்: பிளஸ்–2 மாணவர் திருப்பதியில் மீட்பு!!
Next post பொங்கல் பண்டிகை: மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள மண்பானைகள்!!