பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக விளங்கும் பெண் குரங்கு: சோறூட்டி-தாலாட்டி வளர்க்கும் அதிசயம்!!

Read Time:2 Minute, 45 Second

6d7e80de-7596-43e7-b919-fb6340808fc7_S_secvpfஅரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது.

நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது. சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு ‘நானி’ என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது.

குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராமரிப்பதிலும் பெற்ற தாயை போலவே நானி நடந்துகொள்கிறது.

இதே போல் கடந்த மாதம், ரெயில்வே உயர் மின்னழுத்தக் கம்பியில் சிக்கிய குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கி திடீரென ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. இதைப் பார்த்த பயணிகள் அது இறந்து விட்டதென்று நினைத்து அச்சமடைந்த வேளையில் ஓடி வந்த நட்பு குரங்கு அதை தண்டவாளத்திலிருந்து தூக்கி இழுத்து ஓரமாகக் கொண்டு வந்தது. பின் அதை நன்றாகக் குலுக்கி ஆசுவாசப்படுத்தியது. அதோடு நிற்காமல் தண்டவாளங்களுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரில் அதை முக்கியது. ஒரு கட்டத்தில் அதற்கு சுய நினைவை வரச்செய்வதற்காகக் கடிக்கக் கூட செய்து தனது நண்பனையும் அது பிழைக்க வைத்தது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் அடுத்தவருக்கு உதவும் குணத்தை மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் வேளையில், மனிதர்களால் விலங்கினம் என அழைக்கப்படும் குரங்கின் குணம் நாளுக்கு நாள் மேன்மையடைந்து வருவதை எப்படி பாராட்டினாலும் மிக்க தகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்!!
Next post டெல்லி கோர்ட்டில் வாக்கு மூலம்: இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!!