உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் குடிபோதையில் தகராறு: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

Read Time:2 Minute, 35 Second

2c8cf5a5-0cc1-459a-a9bb-63e99735f18e_S_secvpfமாதனூர் ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் நவசீலன். அவர் வீடு கட்டுவதற்காக அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளார்.

அவர் கேட்ட கடன் தொகையில் முதல் தவனையாக ரூ.7½ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2–வது தவனை கேட்டு அவர் மனு செய்தாராம். 2–வது தவனை வழங்குவதற்கு முன்னதாக மாதனூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடாசலம் அவருடைய வீட்டை ஆய்வு செய்ய சென்றுள்ளார்.

ஆனால், நவசீலன் எந்த வீடும் கட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. கூரை அளவுக்கு கட்டிடம் கட்டிய பிறகே 2–வது தவணை பணம் வழங்க வேண்டும் என்று விதி இருப்பதால், பாதி கட்டிடம் கட்டிய பிறகே 2–வது தவணை பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென வெங்கடாசலம் கூறியுள்ளார்.

ஆனால், உடனடியாக 2–வது தவணை பணத்தை வழங்க வேண்டும் என நவசீலன் கேட்டுள்ளார். வெங்கடாசலம் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என தெரிகிறது. அதனால் நவசீலன், உதவி தொடக்க கல்வி அலுவலரை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதனூரில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு குடிபோதையில் சென்ற நவசீலன், உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் தகராறு செய்து கடன் வழங்க அனுமதி வழங்குமாறு மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றாராம். அவரை அலுவலக ஊழியர்கள் வெளியேற்றினர்.

இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரங்கநாதனிடம் புகார் செய்தார். அவர் நேரில் விசாரணை நடத்தியதில் நவசீலன் குடிபோதையில் தகராறு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து நவசீலனை சஸ்பெண்டு செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரங்கநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கொண்டும் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி கோபித்து சென்றதால் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கணவன்!!
Next post கின்னஸ் சாதனைக்காக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி!!