ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!

Read Time:2 Minute, 58 Second

Hollywood-news-278நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே ஒரு அழகு க்ரீம் விளம்பரத்துக்காக நடிக்கக் கேட்டபோது, ‘இது பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரம்’ என நடிக்க மறுத்தார். இப்போது ஒரு ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனம், தங்கள் விளம்பரத் தூதராக இருப்பதற்கு ஐந்து கோடி ரூபாய் தருவதாகச் சொன்னது. ‘‘உங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்து விட்டுகான்டிராக்டில் கையெழுத்து போடுகிறேன்’’ என்றிருக்கிறார் கங்கனா.

டாம் க்ரூஸின் முன்னாள் மனைவியான கேத்தி ஹோம்ஸ், இப்போது டைரக்டர் அவதாரம் எடுக்க ரெடியாகிறார். க்ரூஸுடனான தனது ஆறாண்டு வாழ்க்கையை வைத்து படத்துக்குக் கதை எழுதுகிறாராம். பதற்றத்தில் தவிக்கிறார் டாம் க்ரூஸ்.

சோனம் கபூருக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கும் சுத்தமாக ஆகாது. சல்மான் கான் படங்களில் அடுத்தடுத்து நடித்தபோது சல்மானும் சகோதரர்களும் சோனாக்ஷியைக் கொண்டாடினார்கள். இப்போது சோனம் கபூரின் ரவுண்ட்! சல்மானின் சகோதரருடன் நடித்த சோனம், அடுத்து சல்மான் கானுடன் நடிக்கப் போகிறார். படங்களின் புரொமோஷனுக்காக சல்மான் சகோதரர்களுடன் ஊர் ஊராகப் போகிறார் சோனம். வழக்கமாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சல்மானின் முன்னாள் ஹீரோயின்கள் வருவார்கள். ஆனால் சோனம் இருப்பதால் சோனாக்ஷி தவிர்த்து விட்டார்.

தனது ‘பிகே’ படத்தின் புரொமோஷனுக்காக வாரணாசி போன அமீர் கான், ஒரு கடைக்குள் ஏறி ஒரு மணி நேரம் செலவிட்டு அழகான ஒரு பனாரஸ் பட்டுப் புடவையை செலக்ட் செய்தார். அது, படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா சர்மாவுக்கு அன்புப் பரிசு!

திறமையான நடிகை, தரமான இயக்குனர் என பெயர் வாங்கியிருந்தாலும், ‘‘நான் ஒரு மோசமான எடிட்டர்’’ என்கிறார் ஏஞ்சலினா ஜோலி. லேட்டஸ்ட்டாக அவர் இயக்கிய
‘அன்புரோக்கன்’ படத்தில் நீளம் கருதி நிறைய காட்சிகளை வெட்ட வேண்டி இருக்கிறதாம். எடிட்டரோடு உட்கார்ந்தபோது எதையும் வெட்ட விடவில்லை ஜோலி. கடைசியில், அவருக்குத் தெரியாமல் நீளம் குறைத்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாணியம்பாடி அருகே சுற்றுலா வந்த தெலுங்கானா மாணவி சாவு!!
Next post கோவையில் கணவனை கொல்ல முயன்ற மனைவி போலீசில் சிக்கினார்!!