கங்கையில் மிதந்து வந்த 108 பிணங்கள் மீட்பு: விசாரணை நடத்த உத்தரவு!!

Read Time:1 Minute, 56 Second

7b934d7c-bdf8-41c6-8a00-3da257e9aabf_S_secvpfபுனித கங்கை நதியில் ஆழ்த்தப்படும் ஆன்மாக்கள் வீடு பேறு அடையும் என்பது வட மாநில இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்கள் கங்கை நதியில் மூழ்கி தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதுண்டு. சில பகுதிகளில் மரணம் அடைந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் வீசும் வழக்கம் உள்ளது.

கங்கையில் மிதக்கும் பிணங்களால் அந்த நதி கடுமையாக மாசு அடைகிறது. சுற்றுச் சூழலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புனித கங்கையை சுத்தப்படுத்த பிரதமர் மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி உள்ளார்.

உமாபாரதி தலைமையில் செயல்படும் இந்த அமைச்சகம் கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நடப்பாண்டில் ரூ.2037 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கங்கையில் 108 பிணங்கள் அடுத்தடுத்து மிதந்து வந்தன. கான்பூர்– உன்னோ நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் அந்த பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன.

அந்த 108 பிணங்களும் உடனடியாக மீட்கப்பட்டன. அவற்றில் பல பிணங்கள் அழுகி போய் இருந்தன. இந்த பிணங்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தி தகனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் 100–க்கும் மேற்பட்ட பிணங்கள் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை அறிந்தால் படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?
Next post பொங்கல் செலவுக்காக பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் கைது!!