கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!!

Read Time:1 Minute, 49 Second

48de73f6-4ad4-4075-bd1c-a6f4771fb8db_S_secvpf‘ஓரம் போ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர்-காயத்ரி. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், பூஜா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாவை வைத்து ‘வ’ (வ குவாட்டர் கட்டிங்) என்னும் படத்தை இயக்கினார்கள். இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இதையடுத்து படம் இயக்காமல் இருந்த இவர்கள் தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளார்கள். இப்படம் போலீஸ் என்கவுண்டர் பின்னணியில் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என்னும் தலைப்பை வைத்திருக்கிறார்கள். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு புஷ்கர்-காயத்ரி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை கூடியவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் சினிமாவில் சாதிக்க வலுவான அடித்தளம் அமைத்தவர் பாலச்சந்தர்: ரஜினிகாந்த் பேட்டி!!
Next post ஜெய்யை பாராட்டிய தயாரிப்பாளர்!!